சர்வதேச போதைப் பொருள் கும்பலைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற தமிழர், கர்நாடகா மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டுள்ளார். கால் சென்டர் அமைத்து போதைப் பொருளை சுரேஷ்குமார் உட்பட 8 பேர் விற்பனை செய்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. Tamil Nadu Drug Racket
இந்திய போதைப் பொருள் தடுப்பு படையினர் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் செயல்பட்டு வந்த கால் சென்டரில் திடீர் சோதனை நடத்தினர். இந்த கால்சென்ட்ர் மூலமாக வெளிநாடுகளில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையைத் தொடர்ந்து சுரேஷ்குமார் என்ற தமிழர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தமிழர் சுரேஷ்குமார், உடுப்பி மாவட்டத்தில் வசித்து வந்தார். உடுப்பி போலீசார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த கைது நடவடிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் சர்வதேச போதைப் பொருள் விற்பனை கும்பலைச் சேர்ந்தவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.