Tour: முருகனின் அறுபடை வீடுகளுக்கான தமிழ்நாடு அரசின் இலவச ஆன்மீக பயணம்- மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம்!

Published On:

| By Mathi

Spiritual Tour TN Govt

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மீக பயணத்துக்கு (Spiritual Tour) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 60 வயது முதல் 70 வயதுக்குட்பட்ட 2,000 பக்தர்கள் முருகனின் அறுபடை வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

ADVERTISEMENT
  • திருப்பரங்குன்றம்
  • திருச்செந்தூர்
  • பழனி
  • சுவாமிமலை
  • திருத்தணி
  • பழமுதிர்சோலை

ஆகிய திருத்தலங்களுக்கு முழுமையாக கட்டணமில்லா ஆன்மீகப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தகுதி

ADVERTISEMENT
  • வயது 60 முதல் 70
  • ஆண்டு வருமானம் ரூ2,00,000-க்கு கீழ் இருக்க வேண்டும்
  • உடல் நலம், வருமானத்தை உறுதி செய்யும் சான்றுகள் அவசியம்

விண்ணப்பிக்க

www.hrce.tn.gov.in இணையதளத்தில் அல்லது மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெறலாம்

ADVERTISEMENT

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி செப்டம்பர் 15 (15.09.2025)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share