TET தேர்வு- தகுதி மதிப்பெண்கள் குறைப்பு- தமிழக அரசு அரசாணை!

Published On:

| By Mathi

TET exam

ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் SC/ST/BC/MBC பிரிவ்னருக்கான தகுதி மதிப்பெண்களை அதிரடியாகக் குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறுகையில், “ தமிழ்நாடு முதலமைச்சர்
ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ஆசிரியர்களின் நலன்காக்கும் அரசாகச் செயல்படும் திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த அரசாணையாக, பல லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் கனவுகளோடு காத்திருக்கும் தேர்வர்களுக்கும் பலனளிக்கும் வகையில் இனிவரும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி மதிப்பெண்களை

ADVERTISEMENT
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு55 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும்
  • பிற்படுத்தப்பட்டோர் – மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து, 50 சதவீதமாகவும் மாற்றி அரசாணை வெளியிடப்படுகிறது.

இதன் மூலம் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நம் முதலமைச்சர் என்றுமே உறுதுணையாக இருப்பார் என்பதையும், இது சமூகநீதி காக்கும் அரசு என்பதையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருக்கின்றோம்.

ஆசிரியர்கள் மகிழ்ச்சியே திராவிட மாடல் அரசின் மகிழ்ச்சி! என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share