ஜெர்மனியில் செவிலியர் பணி: மாதம் 2 லட்சம் சம்பளம்… முழு விவரம் இதோ!

Published On:

| By Selvam

ஜெர்மனி நாட்டில் செவிலியர்களாக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. Germany nurse Job vacancy

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (மார்ச் 4) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“ஜெர்மனி நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவதற்க்கு ஆறு மாதம் பணி அனுபவம் பெற்ற 35 வயதிற்க்குட்பட்ட, டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண் அல்லது பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

இவர்களுக்கு B1,B2 நிலையில் இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவித்து மாத சம்பளமாக சுமார் 2 லட்சம் வழங்கப்படும். எனவே, தகுதியுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் omclgerman2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.03.2025-க்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in மற்றும் 044-22505886/ 6379179200 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளது. Germany nurse Job vacancy


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share