10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்

Published On:

| By Mathi

TN-10th-Exam

தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் இன்று தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்.6-ந் தேதி வரை நடைபெறும்.

ADVERTISEMENT

4,219 மையங்களில் 9,09,002 மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்.

மொத்தம் 12,467 பள்ளிகளில் இருந்து 8,82,806 மாணவர்களும் 25,801 தனித்தேர்வர்களும் 395 சிறை கைதிகளும் தேர்வு எழுத உள்ளனர்.

ADVERTISEMENT

தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் இன்று நடைபெறுகின்றன.

பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தமது எக்ஸ் பக்கத்தில்;, “10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

ADVERTISEMENT

முதல் பொதுத் தேர்வை எழுதவுள்ளீர்கள். அந்த Excitement இருக்க வேண்டுமே தவிர, பயமோ பதற்றமோ இருக்கக் கூடாது. காலாண்டு அரையாண்டுத் தேர்வுகளைப் போலவே இதுவும் ஒரு தேர்வுதான் என்றெண்ணி மகிழ்ச்சியுடன் தேர்வறைக்குள் செல்லுங்கள். All the Best என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share