தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கும் என தமிழக சட்டப் பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலக பேரவை அலுவலகத்தில் இன்று அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சட்டப்பேரவை வீதி 26 (1) இன் கீழ் சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் வரும் அக்டோபர் 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணி அளவில் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூடும். அன்றைய தினம் சபை கூடியதும் பேரவை ஒத்திவைக்கப்பட்டதில் இருந்து இதுவரை மறைந்த வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் எட்டு பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
தொடர்ந்து கடந்த 2025 -2026ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினத்திற்கான நிதி அனுமதி அளிக்கப்படும். எத்தனை நாட்கள் கூட்டம் நடைபெறும் என்பது குறித்து அன்றைய தினம் அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
