தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி வரும் டிசம்பர் 11-ந் தேதி தொடங்குகிறது.
தமிழக சட்டமன்றத்தின் பதவி காலம் 2026-ம் ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. இதனையடுத்து தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கான தேர்தல் அதிகாரிகள் அணையில் நியமிக்கப்பட்டனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் முதல் கட்டம் முடிவடைந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இந்த நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து வரும் 11-ந் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட இருக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்க உள்ளது.
