தமிழ் ரசிகர்களால் குறிப்பாக 80’s, 90’s கிட்ஸ்களால் அதிகம் கொண்டாடப்பட்ட, இந்திய நடிகைகளின் உண்மையான பெயர்கள் இதுதான்.
இதில் சில பேரின் பெயர் ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருந்தாலும் கூட, பலரின் இயற்பெயர் கண்டிப்பாக உங்களுக்கு ஆச்சரியங்களை அளிக்கவல்லது. cinema actresses real names
உங்களின் மனங்கவர்ந்த பேவரைட் நடிகைகளின் உண்மை பெயர்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

பூமிகா
‘பத்ரி’, ‘ரோஜாக்கூட்டம்’, ‘சில்லுன்னு ஒரு காதல்’ படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகை பூமிகாவின் இயற்பெயர் ரச்னா சாவல்.
சினேகா
‘GOAT’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து, இன்றும் பிஸியான நடிகையாக வலம்வரும் நடிகை சினேகாவின் இயற்பெயர் சுஹாசினி ராஜாராம் நாயுடு.
ரம்பா
தளபதி விஜயுடன் ‘நினைத்தேன் வந்தாய்’, ‘மின்சார கண்ணா’, ‘என்றென்றும் காதல்’ என தொடர்ந்து ஹிட் படங்களில் ஜோடியாக நடித்த ரம்பாவின் இயற்பெயர் விஜயலட்சுமி ஈடி.

மீரா ஜாஸ்மின்
‘சண்டக்கோழி’, ‘ஆய்த எழுத்து’, ‘ரன்’ படங்களின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த நடிகை மீரா ஜாஸ்மினின் இயற்பெயர் ஜாஸ்மின் மேரி ஜோசப்.
ரோஜா
‘செம்பருத்தி’ படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து ஏராளமான ஹிட் படங்களில் நடித்த ரோஜா இயக்குநர் செல்வமணியை திருமணம் செய்து செட்டில் ஆனார். தற்போது ஆந்திரா அரசியலிலும் பட்டையை கிளப்பி வரும் இவரின் இயற்பெயர் ஸ்ரீலதா ரெட்டி.
நயன்தாரா
‘ஐயா’ படத்தின் வழியாக அறிமுகமான நடிகை நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவரின் இயற்பெயர் டயானா மரியம் குரியன்.

கீர்த்தி ஷெட்டி
‘தி வாரியர்’ படத்தின் வழியாக தமிழுக்கு வந்த கீர்த்தி ஷெட்டி ‘தென்னிந்திய சென்ஷேனல்’ நடிகை என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவரின் இயற்பெயர் அத்வைதா.
தபு
‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படம் வெளியாகி 24 ஆண்டுகள் கடந்தும் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படும் நடிகையாக தபு இருக்கிறார். இன்றும் பிஸி நடிகையாக வலம்வரும் இவரின் இயற்பெயர் தபாசும் ஃபாத்திமா ஹாஸ்மி.
தேவயானி
அறிமுகம் ‘தொட்டாச்சிணுங்கி’ என்றாலும் உச்சத்திற்கு கொண்டு சென்றது ‘காதல் கோட்டை’ தான். தமிழ் ரசிகர்களால் இவரின் எளிமையான அழகும், நடிப்பும் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. தேவயானியின் இயற்பெயர் சுஷ்மா ஜெயதேவ்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வருஷம் 16 : தோனிக்காக ‘சண்டை’ செய்த மும்பை… வீடியோ உள்ளே!
ஐந்து மாநிலங்களில் போட்டி: டெல்லியில் திருமாவளவன் பேட்டி!
cinema actresses real names
