திமுகவுடனான பேச்சுவார்த்தைகள் குறித்து அடுத்த 2,3 நாட்களில் தெளிவான தகவல் கிடைக்கும் என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கிரிஷ் சோடங்கர் இன்று பிப்ரவரி 2-ந் தேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியுடன் இன்று காலையில் பேசினேன். திமுகவுடனான பேச்சுவார்த்தை பற்றி அடுத்த 2,3 நாட்களில் தெளிவாகும். திமுகவைப் பொறுத்தவரைக்கும் குழு அமைப்பது என்பது எல்லாம் 5 நிமிட வேலைதான்.. அது பெரிய விஷயமே இல்லை. இவ்வாறு கிரிஷ் சோடங்கர் கூறினார்.
