“என்னப்பா… காலேஜ் முடிச்சுட்டு வேலை தேடிட்டு இருக்கியா? இல்ல, புதுசா ஏதாவது லேட்டஸ்ட் டெக்னாலஜி கத்துக்கிட்டு பெரிய ஐடி கம்பெனில சேரணும்னு ஆசையா? ஆனா அதுக்கெல்லாம் பீஸ் அதிகமா இருக்கேன்னு கவலைப்படுறியா? இனி அந்த கவலை வேண்டாம் பாஸ்… உங்களுக்காகவே தமிழ்நாடு அரசு ஒரு செம ஜாக்க்பாட்டைக் கொண்டு வந்திருக்கு!”
தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் எதிர்காலத்தை மாற்றும் வகையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள ஒரு முன்னணி தனியார் நிறுவனத்துடன் இணைந்து, எதிர்காலத்திற்குத் தேவையான 4 விதமான உயர்தரத் திறன் பயிற்சிகளை முற்றிலும் இலவசமாக வழங்கப் போகிறார்கள்.
தாட்கோ வழங்கும் அந்த 4 கோல்டன் கோர்ஸ்கள்! இந்தத் திட்டத்தில் வெறும் படிப்பு மட்டும் கிடையாது பாஸ், கூடவே தங்குமிடம் மற்றும் உணவு வசதியும் இலவசம். அந்த 4 கோர்ஸ்கள் இதோ:
- உயர் தொழில்நுட்ப ஏஐ பயிற்சி (Advanced Artificial Intelligence): இப்போ உலகமே ஏஐ (AI) பின்னாடிதான் ஓடிக்கிட்டு இருக்கு. இந்த டெக்னாலஜியை கத்துக்கிட்டா ஐடி துறையில உங்களுக்கு ஒரு ‘கோல்டன் டிக்கெட்’ கிடைச்ச மாதிரிதான்.
- உலகத்தரம் வாய்ந்த உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா (Global Food & Beverage Service Eco Tourism): ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் டூரிசம் துறையில் சாதிக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு செம சான்ஸ்.
- ஆடை வடிவமைப்பு மற்றும் மேலாண்மை (Apparel Designing & Management): ஃபேஷன் டிசைனிங் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட சிறப்புப் பயிற்சி இது.
- அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார மேலாண்மை (Glam & Cosmetology Salon Management): பியூட்டி பார்லர் மற்றும் சலூன் மேனேஜ்மென்ட் துறையில் பெரிய அளவில் வளர இது உதவும்.
யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்? (Eligibility Check)
- சமூகப்பிரிவு: நீங்கள் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் (SC/ST) வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- கல்வித்தகுதி: இந்தப் பயிற்சிகளுக்கு அந்தந்தத் துறைக்கு ஏற்ப குறைந்தபட்ச கல்வித்தகுதி அவசியம். (பொதுவாக 10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்).
- வயது வரம்பு: 18 முதல் 35 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் இதற்குத் தகுதியானவர்கள்.
- பயிற்சி காலம்: இந்த 4 பயிற்சிகளும் 3 மாதங்களுக்கு தீவிரமாக வழங்கப்படும்.
இந்தப் பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு 100% வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அதாவது, படிச்சு முடிச்சதும் கையோடு வேலை (Placement) உறுதி!
இது தமிழ்நாடு அரசு வழங்கும் அங்கீகாரம் பெற்ற பயிற்சி என்பதால், உங்களுடைய ரெஸ்யூமுக்கு இது ஒரு பெரிய ‘வெயிட்டைக்’ கொடுக்கும். குறிப்பாக ஏஐ (AI) பயிற்சியைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள், எதிர்கால வேலைவாய்ப்புச் சந்தையில் ‘ஜாக்க்பாட்’ அடிக்க அதிக வாய்ப்பு இருக்கு. அதுமட்டுமில்லாம லிமிட்டட் சீட்ஸ் தான் இருக்கும்னு சொல்றாங்க. அதனால கடைசி நிமிஷம் வரை வெயிட் பண்ணாம, இப்போவே உங்க டாக்குமெண்ட்ஸை ரெடி பண்ணி அப்ளை பண்ணிடுங்க பாஸ்!
விண்ணப்பிப்பது எப்படி? விருப்பமுள்ள தகுதியான இளைஞர்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tahdco.com என்ற பக்கத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது உங்களுடைய சாதிச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு நகல்களை மறக்காம இணைச்சுடுங்க.
அரசு செலவில் தங்குமிடம், சாப்பாடு, உலகத்தரம் வாய்ந்த பயிற்சி மற்றும் 100% வேலைவாய்ப்பு என எல்லாமே ஒரே இடத்தில் கிடைக்கிறது. இந்த வாய்ப்பை மட்டும் ‘மிஸ்’ பண்ணிடாதீங்க பாஸ்! உங்க பிரண்ட்ஸ்க்கும் இந்தத் தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
