”நான் விஜய்யின் தீவிர ரசிகன், ஆனால்” – விஜய் சேதுபதி மகன் எமோஷனல்!

Published On:

| By christopher

suriya vijay sethupathi very emotional on vijay

நடிகர் விஜய்சேதுபதி மகன் சூர்யாசேதுபதி ‘பீனிக்ஸ்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தை இயக்கியுள்ள பிரபல பைட் மாஸ்டர் அனல் அரசு இயக்குநராகவும், அவரது மனைவி ராஜலட்சுமி தயாரிப்பாளராகவும் அறிமுகம் ஆகின்றனர். suriya vijay sethupathi very emotional on vijay

பீனிக்ஸ் திரைப்படம் வரும் 4ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் சூர்யா சேதுபதி சினிம எக்ஸ்பிரஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனக்கு பிடித்த நடிகர்கள் யார்? என அவர் பட்டியலிட்டுள்ளார்.

அதில், “நான் விஜய் மற்றும் சிலம்பரசனின் தீவிர ரசிகன். இரண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்க நடந்து வரும்போது இருக்குற ஒரு மேஜிக். அவங்க பேசுற டயலாக் எல்லாம் சூப்பராக இருக்கும்.

சில படங்களை திரும்ப திரும்ப எல்லாம் பார்த்திருக்கிறேன். குறிப்பாக மெர்சல் படத்தை 30 முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். செக்க சிவந்த வானம் படத்துல சிம்புவும் – எங்க அப்பாவும் இடையில் நடக்குற பைட் சீன் ரொம்ப பிடிக்கும்.

நான் மாஸ்டர் படத்தை விஜய்க்காக, அவரோட ரசிகனா தான் பார்த்தேன். அந்த படத்தின் இண்ட்ரோ சீனை எத்தனை தடவை பார்த்திருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை.

ஜனநாயகன் படத்தின் கிளிம்ப்ஸ் பார்த்த பிறகு நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். அனல் அரசு மாஸ்டர் தான் அதில் ஸ்ட்ண்ட் மாஸ்டர். ஆனால் ஜனநாயகன் தான் விஜய் சாரின் கடைசி படம் என்பது கொஞ்சம் எமோசனலாக இருக்கிறது” என சூர்யா சேதுபதி பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share