விஜய் சூர்யா இணைந்து நடித்த பிரண்ட்ஸ் படம் 24 ஆண்டுகள் கழித்து வரும் 21 ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது .
அது தொடர்பான விளம்பர நிகழ்சசிக்கு படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்த கணேஷ் பாபுவும் ரமேஷ்கண்ணாவும் மட்டும் வந்திருந்தனர் . மற்றபடி படம் சம்மந்தப்பட்ட ஒரு ஈ காக்காய் குருவி கூட அங்கே இல்லை.
ஏனெனில் படத்துக்கு சம்மந்தம் இல்லாத வேறொரு குழு இந்தப் படத்தை ஒரிஜினல் தயாரிப்பாளர் அப்பச்சனிடம் இருந்து வாங்கி வெளியிடுகிறது.
நிகழ்சசியில் பேசிய கணேஷ்பாபு , ” படத்தில் வடிவேலு பேசிய ஆணியே புடுங்க வேணாம் டயலாக் பின்னாளில் மிகப் பிரபலமானது. அந்த வசனம் ஷூட்டிங்கின் போது, ஒரு காட்சியில் சூர்யா , ‘இந்த ஷாட்டில் நான் என்ன பண்ணனும்?”என்று இயக்குனரிடம் கேட்க, ‘நீ ஆணியே புடுங்க வேணாம் ‘ என்று வடிவேலு சொன்னதுதான் . அப்படி அவர் சொன்னதும் எல்லோரும் சிரிக்க , அதை அப்படியே படத்தில் வைத்தார்கள்” என்றார்
அடுத்துப் பேசிய ரமேஷ் கண்ணா , ” கணேஷ் பாபு சொன்னது தப்பு . அந்த ஆணியே புடுங்க வேணாம், டயலாக் வடிவேலு சொன்னது அல்ல. அது ஸ்கிரிப்ட் பேப்பரிலேயே இருந்தது . பொதுவாக இயக்குனர் சித்திக் யாரையும் சொந்தமாக டயலாக் பேச விடவே மாட்டார்.
ஒரு காட்சியில் என்னிடம் என்னடா நடக்குது என்று கேட்கும் போது , ” நான் மாடு நடக்குது; ஆடு நடக்குது” என்பேன் . சித்திக்கிற்கு அது பிடிக்கவில்லை. அனால் அங்கே இருந்த எல்லாரும் அது நல்லா இருக்கு என்று சொன்னதால் அனுமதித்தார் . சிம்பு கூட என்னிடம் , ‘எனக்கு அந்தப் படத்தில் ஆணியே புடுங்க வேணாம் டயலாக்கை விட மாடு நடக்குது ஆடு நடக்குது காமெடிதான் ரொமப் புடிச்சது ‘ என்று சொன்னார்.
அடுத்த நாள் இன்னொரு நிகழ்ச்சியில் பேசிய கணேஷ் பாபு நான் சொன்னதுதான் உண்மை.. நான் சொன்னது பொய் என்று அவர் சொன்னதுதான் பொய் என்றார்.
கடைசியில் யார் சொல்வது உண்மை என்று தெரியவே இல்லை .
சூர்யா. வடிவேலு இருவருக்குத்தான் அந்த ரகசியம் தெரியும் .
- ராஜ திருமகன்
