டெல்லியில் நடத்தப்பட்டது ‘தற்கொலைப் படை’ தாக்குதல்- உமர் DNA சோதனையில் அதிர்ச்சி தகவல்!

Published On:

| By Mathi

Delhi Blast

நாட்டின் தலைநகர் டெல்லியில் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை பகுதி 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டே இருக்கும். இந்த டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் எண் 1 அருகே நவம்பர் 10-ந் தேதி மாலை 6.50 மணி முதல் இரவு 7 மணிக்குள் கார் குண்டு வெடித்தது. இதனையடுத்து அப்பகுதியில் 13 வாகனங்கள் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்தன.

இந்த சம்பவத்தில் 10 பேர் பலியாகினர்; 24 பேர் படுகாயமடைந்தனர்.

ADVERTISEMENT

இது ‘தேசவிரோதிகளின் பயங்கரவாத தாக்குதல்’ என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கண்டனம் தெரிவித்தது.

டெல்லி கார் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு முன்னதாக, ஜம்மு காஷ்மீர் போலீசார் பயங்கரவாதிகளின் சதிச் செயல் தொடர்பாக கிடைத்த புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

ADVERTISEMENT
  • டெல்லி மற்றும் அதனை சுற்றிய ஃபரிதாபாத், சஹாரன்பூர் ஆகிய இடங்களில் ஜம்மு காஷ்மீர் போலீசார் நடத்திய அதிரடி பெருமளவு அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் சிக்கியது. முதலில் 350 கிலோ வெடிபொருள் என சொல்லப்பட்டது; பின்னர் இது 3,000 கிலோ எனவும் கூறப்படுகிறது. மேலும் ஏகே 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் இந்த சோதனைகளில் கைப்பற்றப்பட்டன.
  • இந்த சோதனைகளைத் தொடர்ந்து வெடிபொருட்கள், ஆயுதங்களைப் பதுக்கியதாக பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) என்ற பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய டாக்டர்கள் உட்பட பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • டெல்லியில் மிகப் பெரிய தாக்குதலை நடத்த இந்த பயங்கரவாத கும்பல் சதித் திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்தது.

தற்போது டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி NIA விசாரித்து வருகிறது. ஐ.ஜி., இரண்டு டி.ஐ.ஜி., மூன்று எஸ்.பி.க்கள் மற்றும் டி.எஸ்.பி.கள் அடங்கிய 10 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை NIA அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு NIA ஏடிஜி விஜய் சாகரே தலைமை வகிக்கிறார்.

NIA விசாரணை குழு சம்பவ இடத்துக்கு சென்று தடயவியல் துறை வல்லுநர்களுடன் இணைந்து தீவிர ஆய்வு மேற்கொண்டது; சிசிடிவி காட்சிகள், தடயவியல் ஆதாரங்கள் ஆகியவற்றைச் சேகரித்தது.

ADVERTISEMENT

தற்கொலைப் படைத் தாக்குதல்

டெல்லியில் வெடிகுண்டு வெடித்த காரை ஓட்டி வந்தவர் டாக்டர் உமர் முகமது நபி என அடையாளம் காணப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள் மூலம் டாக்டர் உமர் முகமது நபி அடையாளம் காணப்பட்டார்.

இதனையடுத்து வெடிகுண்டு காரை ஓட்டி வந்தது டாக்டர் உமர் முகமது நபிதானா? என்பதை உறுதி செய்ய அவரது தாயாரின் DNA, வெடிகுண்டு கார் மற்றும் சம்பவ இடத்தில் சிதறிக் கிடந்த மனித உடல் பாகங்களின் DNA ஆகியவை ஒப்பீடு செய்யப்பட்டது. இதில் காரை ஓட்டி வந்தது டாக்டர் உமர் முகமது நபி என்பது உறுதியாகி உள்ளது. இதனால் டெல்லியில் நடத்தப்பட்டது ‘தற்கொலைப் படை’ தாக்குதல் என்கின்றன புலனாய்வு வட்டாரங்கள்.

டாக்டர் உமர் முகமது நபி, உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணியாற்றி வந்தவர். ஜம்மு காஷ்மீர் போலீசாரால் தமது பயங்கரவாத இயக்க கூட்டாளிகள் கைது செய்யப்பட்டதற்கு பதில் தரும் வகையில் பாகிஸ்தான் உளவு அமைப்பின் உத்தரவுப்படி, இந்த தற்கொலைப் படைத் தாக்குதலை உமர் நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக லக்னோவைச் சேர்ந்த பெண் மருத்துவர் சகீனா சாகீத் என்ற ஷாஹீன் கைது செய்யப்பட்டார். இவர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பெண்கள் பிரிவுக்கு ஆட்சேர்ப்பு பிரிவின் கமாண்டராக இருந்தவர் என தெரியவந்துள்ளது. டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் இதுவரை மூன்று டாக்டர்கள் உட்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share