நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று மார்ச் 9-ந் தேதி கூடுகிறது.
இன்றைய கூட்டத்தில் மக்களவை சபாநாயகர் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச் சூழல் குறித்து மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க இருக்கிறது.
அதே நேரத்தில், இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க் கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு, மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் முயற்சிகள் உள்ளிட்டவைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப இருக்கின்றன.
