கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள் இருந்த நிலையில் ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
திருவனந்தபுரம் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (ஆகஸ்ட் 25) அதிகாலை 2.30 மணி அளவில் கோவை ரயில் நிலையம் வந்தடைந்தது. பின்னர் இங்கிருந்து ஆவாரம்பாளையம் வழியாக சென்ற போது தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள் இருந்தது. அதில் ஏறி சென்றபோது ரயில் குலுங்கியுள்ளது.
இதையடுத்து ஓட்டுநர் ரயிலை நிறுத்தி விட்டு கீழே இறங்கி பார்த்துள்ளார். அப்போது தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ரயில்வே போலீசாருக்குக்கு ரயில்வே பைலட் தகவல் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.
ரயிலை கவிழ்க்க சதியா என்ற கோணத்திலும் கோவை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டது.