மத்திய கிழக்கில் இஸ்ரேல்-ஈரான் மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகளாவிய எரிபொருள் சந்தையில் பதற்றம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக, பிலிப்பைன்ஸ் அரசு தேசிய எரிசக்தி அவசர நிலையை அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் காரணமாக, பிலிப்பைன்ஸ் நாடு ‘தேசிய எரிசக்தி அவசர நிலை’யை அறிவித்துள்ளது. அந்நாட்டின் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் இந்த அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.
இதன் மூலம்
- எரிபொருள் கொள்முதலை விரைவுபடுத்துதல்
- முன்பணம் செலுத்தி இருப்புகளைப் பெறுதல்
- விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்குதல்
- பதுக்கல் மற்றும் லாபமீட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ளப்படும்.
