வைஃபை ஆன் செய்ததும், ”உற்சாகமும் போட்டியும் கரை புரளுதே” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா எந்த கட்சியில உற்சாகம்?
திமுகவில்தான்.. சென்னையில நேத்து திமுக மா.செ.க்கள் கூட்டத்தை சிஎம் ஸ்டாலின் நடத்தினாரு.. அதுல ”அவரை பிடித்தால் சீட் கிடைக்கும், இவரை பிடித்தால் சீட் கிடைக்கும் என நேரத்தையும் உழைப்பையும் யாரும் வீணாக்க வேண்டாம் “மக்களுக்கு பிடித்தவர்களுக்கு “ மட்டுமே இம்முறை சீட். உறுதியாய் வெற்றி பெறும் ஆற்றல் உள்ளவர்களுக்கு மட்டுமே சீட்”னு ஸ்டாலின் பேசியிருந்ததை சோசியல் மீடியாவுல ‘ஸ்டேட்டஸ்’ வெச்சு இருக்காங்க பல திமுக நிர்வாகிகள்..
மா.செ.க்கள் கூட்டத்துல என்ன சுவாரசியம்?
மா.செ.க்கள் கூட்டத்துல நிறையவே சுவாரசியங்கள் நடந்துச்சு..
கொங்கு மண்டல பொறுப்பாளரான செந்தில் பாலாஜி பேசுறப்ப, “பொதுவா காவிரி டெல்டாவில்தான் நாம அதிகமான தொகுதிகளில்ல ஜெயிப்போம்.. இந்த முறை கொங்கு மண்டலத்துல அதிகமான தொகுதிகளில்ல ஜெயிப்போம்”னு சவால் விட்டு சொல்றேன்னார்..
உடனே எழுந்து குறுக்கிட்ட காவிரி டெல்டா மண்டல பொறுப்பாளரான அமைச்சர் நேரு, “காவிரி டெல்டா மண்டலத்துல இருந்த கரூருக்கு பதிலா கடலூர் கொடுத்திருக்கீங்க.. டெல்டாவுல கூட்டணி கட்சிகளுக்கு அதிகமா கொடுக்காம நம்ம கட்சி வேட்பாளர்களை நிறுத்தினா நிச்சயம் நாங்க அதிக தொகுதிகளில்ல ஜெயிச்சு காட்டுவோம்.. செந்தில் பாலாஜியோட சவாலை ஏத்துக்கிறேன்” என சிரித்துக் கொண்டே சொன்னார்.. அமைச்சர் நேரு பேசும் போது, அதே காவிரி டெல்டா அமைச்சரான அன்பில் மகேஸ் கைதட்டிகிட்டே இருந்தாரு..
அப்புறமா அமைச்சர் எ.வ.வேலு பேசும் போது, சேலத்துல இந்த முறை நிச்சயம் நாம அதிகமான தொகுதிகளில்ல ஜெயிப்போம்னு உறுதியா சொல்றேன்.. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்லேயும் நாம அதிகமான தொகுதிகளை ஜெயிப்போம்.. “என்று சொல்லி முடித்த போது ஸ்டாலின் குறுக்கிட்டு, “தேமுதிக, ஓபிஎஸ் பத்தி பேசிடுங்க” என்றார்.

இதுக்கு அப்புறமா, “பல மாவட்ட செயலாளர்கள் தேமுதிகவை கூட்டணிக்குள்ள கொண்டு வாங்கன்னு சொன்னீங்க.. நாம கொண்டு வந்திருக்கிறோம்.. அவங்களுக்கு பரவலா ஓட்டுகள் இருக்கு.. அதனால பல தொகுதிகளில்ல நம்ம வாக்கு எண்ணிக்கை உயரும்.. ஓபிஎஸ் நம்ம கட்சியில இணைஞ்சுருக்கிறாரு.. இது தெக்க நமக்கு ரொம்பவே உதவியா இருக்கும்.. ”ன்னு சொன்னாரு..
இந்த கூட்டத்துல சிஎம் பேசும் போது, “உள்ளடி வேலை எல்லாம் பார்க்காம எலக்ஷன் வேலையை சீரியசா செய்யனும்.. உட்கட்சி பிரச்சனைகளை எல்லாம் சரி செய்யனும்”னு சொல்லிட்டு “ எனக்கு ஒரே பணி தான் அது அரசியல் பணி. 24 மணிநேரமும் அரசியல் அரசியல் அரசியல் அதுதான் என் வாழ்க்கை. உங்க அத்தனை பேரையும் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அதேபோல கழகத்தின் அத்தனை நிர்வாகிகள் பற்றிய update ம் என் table க்கு வந்திட்டே இருக்கும்”னு வார்னிங் கொடுத்தாரு..
சரிய்யா.. இன்னைக்கு திமுகவுல புதுச்சேரிக்கான வேட்பாளர்களை நேர்காணல் செஞ்சிருக்காரே.. அங்க நிலவரம் எப்படி?
புதுச்சேரியில நேத்து வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிடுச்சு.. வர்ற 23-ந் தேதி டைம் முடியுது.. ஆனா திமுக – காங்கிரஸ் கூட்டணியில யாருக்கு எத்தனை சீட்டுன்னு இன்னும் பைனலாகல.
இதை பத்தி விசாரிச்சப்ப, முதல்ல புதுச்சேரியில கூட்டணிக்கு யாரு தலைமைங்கிறதே பிரச்சனை.. ஏன்னா போன டைம் மொத்தம் இருக்கிற் 30 சீட்ல காங்கிரஸ் 14; திமுக 13-ல் போட்டியிட்டாங்க.. இதுல திமுகதான் 6 சீட் ஜெயிச்சது.. காங்கிரஸ் 2 சீட்தான் ஜெயிக்க முடிஞ்சது.. இந்த ரிசல்ட் அடிப்படையில கூட்டணிக்கு நாங்கதான் தலைமைன்னு திமுக சொல்லுது.. காங்கிரஸோ புதுச்சேரின்னா எப்பவுமே நாங்கதான் தலைமைன்னு சொல்லுது..
அதோட, 50% இடங்களை ரெண்டு கட்சிகளும் ஷேர் பண்ணிக்கலாம்னு திமுக சொல்லுது.. காங்கிரஸோ திமுகவுக்கு 40%தான்.. அதாவது 12 சீட்தான்னு சொல்லுது..

இதை பத்தி புதுச்சேரி திமுக பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் சிஎம் ஸ்டாலின்கிட்ட இன்னைக்கு டிஸ்கஷன் செஞ்சிருக்காரு.. அதுல பேசப்பட்டதை வெச்சு ‘டீல்’ இன்னைகோ நாளைக்கோ முடியும்னு சொல்றாங்க..
அதேநேரத்துல புதுச்சேரியில பாஜகவுக்கு 14; என் ஆர் காங்கிரஸுக்கு 16-ன்னு தொகுதி பங்கீடு முடிச்சிருந்தாங்க.. ஆனா எந்தெந்த தொகுதிகள் அப்படிங்கிறது ரொம்பவே பிரச்சனையா இருக்குதாம்.. அதனால பாஜக-அதிமுகவை கழற்றிவிட்டு ரெங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ், விஜய்யின் தவெகவுடன் கூட்டணி வெச்சாலும் ஆச்சரியமில்லைன்னு சொல்றாங்க.. விஜய்க்கு வழிகாட்டியே ரெங்கசாமிதான்னு பேச்சும் இருக்கு.. விஜய் வீட்டுக்கே போய் ரங்கசாமி பேசியும் இருந்தாரு.. இந்த தகவலால பாஜக-அதிமுக ரொம்பவே ஷாக் ஆகியிருக்குன்னும் சொல்றாங்கய்யா என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
