திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியிருக்கும் நிலையில், அதில் மேயர்களாக இருப்பவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று (மார்ச் 28) 2026 தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
அதில், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், முனைவர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
164 வேட்பாளர்களில் 125 பேர் பட்டதாரிகள். சுமார் 80% படித்த பட்டதாரிகளை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது திமுக.
இவர்களில் தற்போது மேயராக இருப்பவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

முதல் வேட்பாளராக கன்னியாகுமரி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட ரெ.மகேஷ் நாகர்கோவில் மாநகராட்சி மேயாராக உள்ளார்.

ஒசூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சத்யா, ஓசூர் மாநகராட்சி மேயராக உள்ளார்.

திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ந.தினேஷ்குமார் திருப்பூர் மாநகராட்சியின் மேயராக உள்ளார்.

தஞ்சாவூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சண்.ராமநாதன் தஞ்சை மாநகராட்சி மேயராக உள்ளார்.
