உங்கள் கனவை சொல்லுங்க திட்டத்தின் நிறைவாக கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (மார்ச் 6) நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
தற்போது அமைச்சர்கள் உரையாற்றி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கி வருகிறார்.
அப்போது, முதல்வரை பார்த்து திவ்யதர்ஷினி , சார் அந்த வைரல் ஆக்சன் மட்டும் இன்னொரு முறை செய்ய முடியுமா? நாங்களும் ஹேப்பி ஆகிருவோம் என்று கேட்க, உடனே இருக்கையில் இருந்து எழுந்த முதல்வர் ஸ்டாலின், ‘முடிந்துவிட்டது’ என செய்கை காட்டினார்.
இதை பார்த்த அமைச்சர்கள் கைத்தட்டி ரசித்தனர்.
முன்னதாக நேற்று முன் தினம் இரவு காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு முடிந்த பிறகு அறிவாலயத்தில் இருந்து வெளியே வந்த முதல்வர் ஸ்டாலின், காரில் ஏறும் போது பத்திரிகையாளரின் கேள்விக்கு ‘முடிந்துவிட்டது’ என்பது போல சைகை காட்டினார்.
முதல்வரின் இந்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலான நிலையில், மீண்டும் அதை செய்ய சொல்லி திவ்யதர்ஷினி கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
