ADVERTISEMENT

என்.எல்.சி தேர்தல் ரிசல்ட்… அனல் கக்கிய ஸ்டாலின்!

Published On:

| By vanangamudi

இடைத்தேர்தலா? என்எல்சி தேர்தலா? என்று வியக்க வைக்கும் வகையில், நேற்று (ஏப்ரல் 25) என்எல்சி தேர்தல் கரன்சிகளுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கிறது. stalin angry about nlc

இந்த தேர்தலில், சிஐடியு, திராவிட தொழிலாளர் சங்கம், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், மஸ்தூர் சங்கம், பாட்டாளி மக்கள் தொழிலாளர் சங்கம், தொமுச ஆகிய ஆறு சங்கங்கள் போட்டியிட்டன.

ADVERTISEMENT

மொத்தமுள்ள 6,800 வாக்காளர்களில் 6,364 வாக்குகள் பதிவாயுள்ளன. இதில், தொமுச – 2,507, அ.தொமுச – 1,389, பாதொமுச – 1,385, சிஐடியு – 794, திராவிட தொழிலாளர் சங்கம் – 231, மஸ்தூர் சங்கம் – 58 வாக்குகள் பெற்றுள்ளன.

இந்த தேர்தலில் சிங்கிள் மெஜாரிட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் பதிவாகியுள்ள வாக்குகளில் 51 சதவிகிதம் வாக்குகள்… அதாவது, 3,183 வாக்குகள் பெற வேண்டும். ஆனால், தொமுச 2,507 வாக்குகளை மட்டுமே பெற்றதால், சிங்கிள் மெஜாரிட்டியில் வெற்றி பெற முடியாமல் போனது.

ADVERTISEMENT

இதனால், தொமுச, அதொமுச இரண்டு தொழிற்சங்கங்களும் பேச்சுவார்த்தைக்கு தகுதியான அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக தேர்வாகியுள்ளது.

இதுதொடர்பாக திமுக வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “ஆளும் கட்சியான தொமுச ஒரு வாக்குக்கு 5,000 கொடுத்திருந்தால், கூடுதலாக 676 வாக்குகள் பெற்று சிங்கிள் மெஜாரிட்டியாக வெற்றி பெற்றிருக்கும். ஆனால், ஆளும் கட்சியாக இருந்தே, வெற்றி பெற முடியாததை கேள்விப்பட்டு முதல்வர் ஸ்டாலின் ரொம்ப டென்ஷன் ஆகிவிட்டார். இதனால் முதல்வர் அலுவலகத்தில் இருந்து ரிப்போர்ட் கேட்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

அதேபோல, தொமுச குறைவான வாக்குகள் வாங்கியதைப் பற்றி திமுக தலைமைக்கு தொமுச பேரவை தலைவர் சண்முகம் எம்.பி அளித்துள்ள விளக்கத்தில், தொமுசவில் வன்னியர்கள் அதிகமாக உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். ஆனால், அவர்கள் தொமுசவுக்கு வாக்களிக்காமல் சாதி ரீதியாக பாதொச-வுக்கு வாக்களித்துள்ளனர் என்று விளக்கமளித்துள்ளார்” என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

அதேபோல, பாதொசவை விட நான்கு ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று, அதொமுச வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து, அதிமுக ஆராய்ந்ததில், அதொமுசவில் உள்ள சில வன்னியர் வாக்காளர்கள் பாதொமுசவிற்கு வாக்களித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. stalin angry about nlc

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share