கஷ்டப்பட்டு படிச்சு நல்ல கட்-ஆஃப் வாங்கிட்டா போதும், கவுன்சிலிங்ல ஈஸியா SSN சீட் வாங்கிடலாம்”னு பிளான் பண்ணி வச்சிருக்கீங்களா?
“ஐயோ… பிளானை மாத்துங்க பாஸ்!”
தமிழகத்தின் டாப் இன்ஜினியரிங் கல்லூரியான SSN-ல் சேர நினைக்கும் மாணவர்களுக்கு, 2026 அட்மிஷன் முறையில் ஒரு அதிரடி மாற்றம் வந்துள்ளது. இதுவரை இருந்த நடைமுறைகள் மாறி, இப்போது புது ரூட் போடப்பட்டுள்ளது.
என்ன மாற்றம்?
சென்னை சிவ நாடார் பல்கலைக்கழகத்தின் (Shiv Nadar University Chennai) கீழ் 2026-27 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், SSN பொறியியல் கல்லூரியின் அட்மிஷன் செயல்முறையும் சிவ நாடார் பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு முறையைச் சார்ந்தே இருக்க வாய்ப்புள்ளது.
SNUCEE 2026 – இதுதான் இனி ‘கேட் பாஸ்’:
இனி அட்மிஷன் பெற ‘SNUCEE’ (Shiv Nadar University Chennai Entrance Exam) என்ற நுழைவுத் தேர்வை எழுதுவது மிக முக்கியம்.
- விண்ணப்பம்: ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு (Registration) தொடங்கிவிட்டது.
- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?: 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அல்லது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- தேர்வு எப்போது?: 2026ஆம் ஆண்டிற்கான தேர்வுகள் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செலக்ஷன் ப்ராசஸ் (Selection Process):
வெறும் 12ஆம் வகுப்பு மார்க் மட்டும் போதாதுங்க… மூன்று கட்டங்களைத் தாண்டினால்தான் சீட் கன்ஃபார்ம்!
- நுழைவுத் தேர்வு (Entrance Exam): கணிதம் (Maths), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) மற்றும் ஆப்டிடியூட் (Aptitude) சார்ந்த கேள்விகள் கணினி வழித் தேர்வாக நடைபெறும்.
- நேர்காணல் (Interview): நுழைவுத் தேர்வில் ஷார்ட்லிஸ்ட் (Shortlist) ஆகும் மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். இதில் உங்கள் தனித்திறமை சோதிக்கப்படும்.
- போர்டு மார்க்: இறுதியாக, உங்கள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
ஸ்காலர்ஷிப் (Scholarship):
“நுழைவுத் தேர்வு வச்சா பீஸ் (Fees) அதிகமாகுமே?”னு பயப்பட வேண்டாம். திறமையான மாணவர்களுக்குக் கோடிக்கணக்கில் ஸ்காலர்ஷிப் வழங்கும் வழக்கம் இப்போதும் தொடர்கிறது. மெரிட் ஸ்காலர்ஷிப், முதல் தலைமுறைப் பட்டதாரிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான ஸ்காலர்ஷிப் எனப் பல சலுகைகள் உண்டு.
மாணவர்களே… இதுவரைக்கும் ‘கட்-ஆஃப்’ ரேஸில் ஓடிக்கிட்டு இருந்தீங்க. இனிமே ‘ஸ்கில்’ (Skill) ரேஸ்ல ஓடணும். SNUCEE தேர்வுல சும்மா மனப்பாடம் பண்ணி எழுத முடியாது. கான்செப்ட் (Concept) புரிஞ்சு படிச்சவங்களால தான் ஜெயிக்க முடியும்.
அதே மாதிரி, ‘TNEA கவுன்சிலிங்ல பாத்துக்கலாம்’னு அசால்ட்டா இருக்காதீங்க. SSN, சிவ நாடார் மாதிரி டாப் காலேஜ்ல சேரணும்னா, இந்த என்ட்ரன்ஸ் எக்ஸாம்தான் இனி முக்கியம். இப்பவே சிலபஸை டவுன்லோட் பண்ணிப் படிக்க ஆரம்பிங்க. அப்ளிகேஷன் போடத் தவறிராதீங்க!
