“டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுதியாச்சு… அடுத்து என்ன?” என்று யோசிப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான ‘மாஸ்’ அறிவிப்பு.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் பணியாளர் தேர்வாணையம் (SSC), 2026ஆம் ஆண்டிற்கான தேர்வுக் காலண்டரை (Exam Calendar) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. “எப்போ எக்ஸாம் வரும்னு தெரியலையே” என்ற குழப்பம் இனி வேண்டாம். 10ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை அனைவருக்கும் இதில் வேலை காத்திருக்கிறது!
எந்த எக்ஸாம்? எப்போ வரும்? (Tentative Schedule) எஸ்எஸ்சி வெளியிட்டுள்ள உத்தேச அட்டவணைப்படி, முக்கியத் தேர்வுகளுக்கான தேதிகள் இதோ:
CGL 2026 (பட்டதாரிகளுக்கானது):
- நோட்டிபிகேஷன்: ஆகஸ்ட் 26, 2026.
- கடைசி தேதி: செப்டம்பர் 24, 2026.
- தேர்வு மாதம்: டிசம்பர் 2026.
- இன்கம் டாக்ஸ் இன்ஸ்பெக்டர் ஆகணும்னா இதைத் தவறவிடாதீங்க!
CHSL 2026 (12ஆம் வகுப்பு முடித்தவர்கள்):
- நோட்டிபிகேஷன்: மே 26, 2026.
- கடைசி தேதி: ஜூன் 24, 2026.
- தேர்வு மாதம்: ஆகஸ்ட் / செப்டம்பர் 2026.
MTS 2026 (10ஆம் வகுப்பு முடித்தவர்கள்):
- நோட்டிபிகேஷன்: ஜூன் 23, 2026.
- கடைசி தேதி: ஜூலை 22, 2026.
- தேர்வு மாதம்: செப்டம்பர் / அக்டோபர் 2026.
செலக்ஷன் போஸ்ட் (Selection Post Phase XIV):
- நோட்டிபிகேஷன்: ஏப்ரல் 21, 2026.
- தேர்வு: ஜூலை 2026.
ஸ்டெனோகிராபர் (Stenographer Grade C & D):
- நோட்டிபிகேஷன்: செப்டம்பர் 2026.
- தேர்வு: நவம்பர் / டிசம்பர் 2026.
காலண்டர் வந்தாச்சு… இனிமே காரணம் சொல்ல முடியாது!”
- ஆங்கிலம் முக்கியம்: டிஎன்பிஎஸ்சி போல இல்லாமல், எஸ்எஸ்சி தேர்வுகளில் ஆங்கிலம் (English) மற்றும் கணிதம் (Maths) மிக முக்கியம். இப்போதே பேசிக்ஸை ஸ்ட்ராங் பண்ணுங்க.
- தமிழில் எழுதலாம்: எம்டிஎஸ் (MTS) மற்றும் சிஎச்எஸ்எல் (CHSL) தேர்வுகளை இப்போது தமிழிலேயே எழுத முடியும் என்பது நம்ம ஊர் மாணவர்களுக்குப் பெரிய வரம். அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
- ஒரே சிலபஸ்: CGL-க்குத் தயாரானால், மற்ற எல்லா தேர்வுகளையும் (CHSL, MTS) ஈஸியாகக் கையாளலாம். அதனால் டார்கெட் எப்போதுமே பெருசா இருக்கட்டும்.
முழு அட்டவணையை ssc.gov.in இணையதளத்தில் டவுன்லோட் செய்து, உங்கள் ஸ்டடி ரூம் சுவரில் ஒட்டி வையுங்கள். 2026 உங்கள் வருடம்!
