ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஶ்ரீநகர் நவ்காம் காவல் நிலையத்தில் வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 9 போலீசார் பலியாகினர்.
டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை காவல் துறை மற்றும் தடயவியல் குழுவினர் ஶ்ரீநகர் நவ்காம் காவல் நிலையத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் வெடித்து சிதறின. இதில் போலீஸ் அதிகாரிகள் தூக்கி வீசப்பட்டனர்.
ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 360 கிலோ முதல் 3000 கிலோ வரையிலான அம்மோனியம் நைட்ரேட் மற்றும் பிற ரசாயனங்கள் அடங்கிய வெடிபொருட்கள் வெடித்து சிதறின.
இந்த சம்பவத்தில் 9 போலீஸ் அதிகாரிகள் பலியாகினர்; 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் (DGP) நளின் பிரபாத், இந்த சம்பவம் ஒரு தற்செயலான விபத்து என்றும், இதில் எந்தவித பயங்கரவாத சதியும் இல்லை என்றும்
விளக்கம் அளித்துள்ளார்.
