தமிழகத்தில் காஞ்சிபுரம், தென்காசி உள்ளிட்ட 4 மாவட்ட எஸ்பிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில் இன்று (மார்ச் 27) திடீரென நான்கு மாவட்டங்களின் எஸ்பிக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய எஸ்பிக்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
காஞ்சிபுரம் எஸ்பியாக ஜவகர் ஐபிஎஸ், பெரம்பூர் எஸ்பியாக பிரபாகர் ஐபிஎஸ், தஞ்சாவூர் எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் மற்றும் தென்காசி எஸ்பியாக மயில்வாகனன் ஐபிஎஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை காலை 11 மணியளவில் அந்தந்த மாவட்டங்களில் பொறுப்பேற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
