ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற மக்கள் சென்னைக்கு திரும்புவதற்கு வசதியாக இன்று (அக்டோபர் 5) நெல்லை மற்றும் மதுரையில் இருந்து இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கபடுகின்றன.
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் வாரயிறுதி விடுமுறை காரணமாக பொதுமக்கள் பலரும் பல இடங்களில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு சென்றனர்.
இந்த நிலையில் அவர்கள் மீண்டும் சென்னை திரும்பவதற்கு வசதியாக தெற்கு ரயில்வே சிற்ப்பு ரயில்களை அறிவித்தது.
நெல்லை – தாம்பரம்!
அதன்படி நெல்லையில் இருந்து 17 பெட்டிகள் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06014) இன்று மாலை 4.50 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் கோவில்பட்டி, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக நாளை அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

மதுரை – தாம்பரம்!
அதேபோன்று மதுரையில் இருந்து 12 பெட்டிகளுடன் முன்பதிவு இல்லாத சிறப்பு மெமு ரயில் (06162) இன்று மாலை 7 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் திருச்சி, தஞ்சை, சீர்காழி விழுப்புரம் வழியாக நாளை காலை 6 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.