ADVERTISEMENT

வேளாங்கண்ணி திருவிழா… சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே!

Published On:

| By christopher

special trains announced for velankanni festival

வேளாங்கண்ணி திருவிழா நெருங்குவதையொட்டி ரயில்வே வாரியம் சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

நாகப்பட்டிணம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அடுத்த 10 நாட்களும் சிறப்பு திருப்பலி, தேர்பவனி என செப்டம்பர் 8ஆம் தேதியுடன் பேராலயத் திருவிழா நிறைவடைகிறது.

ADVERTISEMENT

இதனையொட்டி வேளாங்கண்ணிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு ரயில்வே வாரியம் சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி :

அதன்படி தெற்கு ரெயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”எர்ணாகுளம் சந்திப்பு வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரெயில் (வண்டி எண் 06061) ஆகஸ்ட் 27, செப்டம்பர் 03 மற்றும் 10 ஆகிய தேதிகளில் (புதன்கிழமைகளில்) இரவு 11.50 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு கொல்லம், புனலூர், தென்காசி, சிவகாசி, அறந்தாங்கி, திருத்துறைப்பூண்டி வழியாக மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

ADVERTISEMENT

மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணி – எர்ணாகுளம் வாராந்திர விரைவு ரெயில் (வண்டி எண் 06062) ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமைகளில்) மாலை 6.40 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.55 மணிக்கு எர்ணாகுளத்திற்கு சென்றடையும்.

மும்பை – வேளாங்கண்ணி

அதே போன்று மும்பை – வேளாங்கண்ணி சிறப்பு ரயில் (வண்டி எண் 01161) மும்பை லோக்மான்யா திலக் சந்திப்பில் இருந்து ஆகஸ்ட் 26 ஆம் தேதி செவ்வாய்கிழமை மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, புனே, வாடி, ராய்ச்சூர், கடப்பா, காட்பாடி வழியாக வேளாங்கண்ணியை 28ஆம் தேதி வியாழக்கிழமையன்று அதிகாலை 3 மணிக்கு சென்றடையும்.

ADVERTISEMENT

மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணி – மும்பை சிறப்பு ரயில் (வண்டி எண் 01162) வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 28ஆம் தேதி காலை 6 மணிக்கு புறப்பட்டு, மும்பை லோக்மான்யா திலக் சந்திப்பை 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.20 மணிக்கு சென்றடையும்.

இதே வழித்தடத்தில் மும்பை – வேளாங்கண்ணி சிறப்பு ரயில் (வண்டி எண் 01163) மும்பை லோக்மான்யா திலக் சந்திப்பில் இருந்து செப்டம்பர் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு புறப்பட்டு புனே, வாடி, ராய்ச்சூர், கடப்பா, காட்பாடி வழியாக வேளாங்கண்ணியை 9ஆம் தேதி செவ்வாய்கிழமை அதிகாலை 3 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணி – மும்பை சிறப்பு ரயில் (வண்டி எண் 01164) வேளாங்கண்ணியில் இருந்து செப்டம்பர் 9ஆம் தேதி காலை 6 மணிக்கு புறப்பட்டு, மும்பை லோக்மான்யா திலக் சந்திப்பை 10ஆம் தேதி புதன்கிழமை மாலை 4.20 மணிக்கு சென்றடையும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share