ராமேஸ்வரம் பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி-விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில்!

Published On:

| By Minnambalam Desk

Rameswaram

ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான ரிசர்வேசன் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. Train from Villupuram Announced for Rameswaram Devotees

விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து (வண்டி எண்: 06109) ஜூன் 21, 22,28,29 ஆகிய நாட்களில் ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. விழுப்புரத்தில் அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் ராமேஸ்வரத்துக்கு முற்பகல் 11.40 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கமாக ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து (வண்டி எண் 06110) பகல் 2.35 மணிக்கு புறப்பட்டு இரவு10.35க்கு விழுப்புரம் ரயில் நிலையத்தை வந்தடையும்.

விருத்தாசலம், ஶ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக இந்த சிறப்பு ரயில் ராமேஸ்வரம் சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான ரிசர்வேசன் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share