முருக பக்தர்கள் கவனத்துக்கு…. சிறப்பு ரயில்கள், பேருந்துகள் அறிவிப்பு!

Published On:

| By Kavi

தை பூசத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும்  ‘தை’ மாதத்தில், 27 நட்சத்திரங்களில் 7ஆவது நட்சத்திரமான பூசம் நட்சத்திரம் முழுநிலவுடன் சேர்ந்து வரும் நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது.  அசுரர்களை அழிக்க முருகனுக்கு பார்வதி தேவி ஞான சக்தியான வேலை வழங்கிய நாளே, தைப்பூசம் எனவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்தநிலையில் வரும் ஞாயிறு ‘தை பூசத்தை’ முன்னிட்டு  சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் எண் 06145, மதுரை சந்திப்பு – பழனி முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரயில்  பிப்ரவரி 1ஆம் தேதி காலை 06.00 மணிக்கு மதுரை சந்திப்பிலிருந்து புறப்பட்டு அதே நாளில் காலை 08.30 மணிக்கு பழனியை வந்தடையும்.

ADVERTISEMENT

மறுமார்க்கமாக ரயில் எண். 06146, பழனி – மதுரை சந்திப்பு முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரயில்  1ஆம் தேதி பிற்பகல் 2.25 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு அதே நாளில் மாலை 5.00 மணிக்கு மதுரை சந்திப்பை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகள்

ADVERTISEMENT

தைப்பூசம் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 30/01/2026 (வெள்ளிக்கிழமை) அன்று 360 பேருந்துகளும், 31/01/2026 (சனிக்கிழமை) 485 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 30/01/2026 வெள்ளிக் கிழமை அன்று 60 பேருந்துகளும் 31/01/2026 சனிக்கிழமை அன்று 60 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதாவரத்திலிருந்து 30/01/2026 அன்று 20 பேருந்துகளும் 31/01/2026 அன்று 20 பேருந்துகளும்  இயக்கப்படுகிறது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share