ரயில் நிலையம் சீரமைப்பு பணிகள் காரணமாக ரயிலில் ஏறுவதற்கு எங்கே செல்வது என்பதில் பயணிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் தெற்கு ரயில்வே இன்று (செப்டம்பர் 11) விளக்கம் அளித்த்துள்ளது.
சென்னையின் பழம்பெருமை வாய்ந்த ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்தில் புதிய நடைமேம்பாலம் அமைத்தல், அடிப்படை வசதிகள் மேம்படுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக பல ரயில்கள் தாம்பரத்தில் இருந்து ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பயணிகள் அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில் தற்போது தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 5ஆம் தேதி எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து திருச்சி ராக்ஃபோர்ட், மதுரை பாண்டியன் மற்றும் திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்க்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே.
அதன்படி,
வண்டி எண். 12638 மதுரை – சென்னை எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூர் நிலையத்திலிருந்து 17.09.2025 முதல் இயக்கப்படும். (வண்டி எண். 12637 சென்னை எழும்பூர் – மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் எந்த மாற்றமும் இன்றி வழக்கம்போல் சென்னை எழும்பூர்ரிலிருந்து புறப்படும்)
வண்டி எண். 22675 சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளி சோழன் எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூர் நிலையத்திலிருந்து 18.09.2025 முதல் இயக்கப்படும். (வண்டி எண். 22676 திருச்சிராப்பள்ளி – சென்னை எழும்பூர் சோழன் எக்ஸ்பிரஸ் எந்த மாற்றமும் இன்றி வழக்கம்போல் சென்னை எழும்பூரில் நிறுத்தப்படும்)
வண்டி எண். 12653/12654 சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளி – சென்னை எழும்பூர் ராக்க்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூர் நிலையத்திலிருந்து 17.09.2025 முதல் இயக்கப்படும்.

அதே நேரத்தில் 16866/16865 சென்னை – தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் இப்போது தாம்பரத்தில் இருந்து புறப்படும்/நிறுத்தப்படும்.

மேலும் 20636/20635 சென்னை எழும்பூர் – கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இப்போது தாம்பரத்தில் இருந்து புறப்படும்/நிறுத்தப்படும்.

இன்று முதல் நவம்பர் 10 வரை, ரயில் எண். 22158 சென்னை எழும்பூர் – மும்பை CSMT எக்ஸ்பிரஸ் எழும்பூருக்கு பதிலாக சென்னை கடற்கரையில் இருந்து காலை 06:45 மணிக்கு புறப்படும்.
எனினும் மும்பையில் இருந்து சென்னைக்கு திரும்பும் ரயில் 22157 எந்த மாற்றமும் இல்லாமல், எழும்பூரில் நிறுத்தப்படும்.

பயணிகள் தங்கள் பயணத்தை அதற்கேற்ப திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.