அதிமுக- பாஜக கூட்டணியில் தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் திருமாறன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி- பாஜக மேலிடப் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார் திருமாறன்.
இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாறன், சட்டசபை தேர்தலில் ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்க கேட்டிருந்தோம். தற்போது 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரையில் ஒரு தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்றார்.
