புகைப்படக் கலைஞர்கள் மற்றும் யூடியூபர்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்த சோனி நிறுவனத்தின் ‘மிட்-ரேஞ்ச்’ ஃபிளாக்ஷிப் கேமராவான Sony A7 V இறுதியாக அறிமுகமாகியுள்ளது. முந்தைய மாடலான A7 IV-ஐ விடப் பல மடங்கு வேகத்துடனும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடனும் இது களமிறங்கியுள்ளது.
ஆனால், போட்டியாளர்களான கேனான் (Canon) மற்றும் நிக்கான் (Nikon) உடன் ஒப்பிடும்போது, வீடியோ பிரிவில் சோனி கொஞ்சம் சறுக்கியுள்ளதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
புகைப்படங்களுக்கு ‘கிங்’ (Photography Beast): சோனி இந்த முறை வேகத்திற்கு (Speed) அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
- சென்சார்: இதில் புதிய 33MP Exmor RS (Partially Stacked) சென்சார் உள்ளது.
- வேகம்: நொடிக்கு 30 புகைப்படங்கள் (30 fps) வீதம், பிளாக்-அவுட் (Blackout) இல்லாமல் தொடர்ந்து சுட முடியும்.
- ஆட்டோ ஃபோகஸ்: இதில் உள்ள புதிய Bionz XR2 ப்ராசஸர் மற்றும் AI தொழில்நுட்பம், இதுவரை இல்லாத அளவுக்குத் துல்லியமானது. மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், கார், ரயில் என எதை வேண்டுமானாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஃபோக்கஸ் செய்யும்.
- டைனமிக் ரேஞ்ச்: சோனி வரலாற்றிலேயே முதல்முறையாக 16 ஸ்டாப்ஸ் டைனமிக் ரேஞ்ச் (Dynamic Range) இதில் உள்ளது. வெளிச்சம் குறைவான இடங்களிலும் போட்டோக்கள் ‘கிரிஸ்டல் கிளியராக’ இருக்கும்.
வீடியோவில் என்ன குறை? (Video Pros & Cons) யூடியூபர்களுக்கு ஏற்ற 4K வீடியோவை 60 fps மற்றும் 120 fps வேகத்தில் எடுக்க முடியும். நீண்ட நேரம் வீடியோ எடுத்தாலும் சூாகாமல் இருக்கச் சிறந்த ‘கூலிங் சிஸ்டம்’ உள்ளது.
ஆனால், இதன் போட்டியாளர்களான Canon R6 III மற்றும் Nikon Z6 III ஆகியவற்றில் RAW Video வசதி மற்றும் 6K ரெசல்யூஷன் உள்ளது. ஆச்சரியப்படும் விதமாக, சோனி A7 V-ல் RAW Video வசதி இல்லை. 6K அல்லது 8K ஆப்ஷனும் கிடையாது. இது தீவிரமான வீடியோகிராபர்களுக்குப் பெரும் ஏமாற்றம்.
“RAW வீடியோ ஃபைல்கள் அதிக மெமரியை அடைக்கும் என்பதால், கிரியேட்டர்களுக்குத் தேவையான ஷார்ப் ஆன 4K வீடியோவைக் கொடுப்பதில் கவனம் செலுத்தினோம்” என்று சோனி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற சிறப்பம்சங்கள்:
- திரை: வலாகர்களுக்கு (Vloggers) ஏற்றவாறு திரை முழுவதுமாகத் திரும்பும் (Flip out). அதே சமயம், இடுப்பு உயரத்தில் வைத்துப் படம் பிடிக்கத் திரையை மேல்-கீழாகச் சாய்க்கும் (Tilt) வசதியும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
- பேட்டரி: இந்த ரக கேமராக்களிலேயே அதிகபட்சமாக, ஒரு முறை சார்ஜ் செய்தால் 750 போட்டோக்கள் வரை எடுக்கலாம்.
- விலை: இதன் பாடி (Body only) விலை 2,899 டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் ₹2.45 லட்சம் (வரி இல்லாமல்).
மொத்தத்தில்… நீங்கள் ஒரு புகைப்படக் கலைஞர் (Photographer) என்றால், இது உங்களுக்குக் கிடைச்ச வரப்பிரசாதம். ஆனால், நீங்கள் ஒரு சினிமாட்டோகிராபர் என்றால், RAW வீடியோ இல்லாதது உங்களுக்குப் பெரிய குறையாகத் தெரியலாம். டிசம்பர் 18 முதல் இது விற்பனைக்கு வருகிறது.
