விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க நீதிபதி ஆஷா பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் தணிக்கை வாரியம் சார்பாக ஆஜராக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகிறார்.
விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு U/A சான்றிதழ் வழங்க வேண்டும் என தணிக்கை வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி பிடி ஆஷா இன்று காலை (ஜனவரி 9) உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன்பாக தணிக்கை வாரியத்தின் சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்.எல். சுந்தரேசன் வலியுறுத்தினார். இது தொடர்பாக பரிசீலனை செய்வதாக தலைமை நீதிபதி பெஞ்ச் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது தலைமை நீதிபதி பெஞ்ச் வேறு வழக்குகளை விசாரித்து வருகிறது. மேலும் தணிக்கை வாரியம் சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதங்களை முன்வைக்க இருக்கிறார்.
