சிறார்கள் சோசியல் மீடியாவை பயன்படுத்த தடை : சித்தராமையா அதிரடி!

Published On:

| By Kavi

16 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். 

இன்று (மார்ச் 6) 2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். 

ADVERTISEMENT

“அதிகரித்து வரும் மொபைல் போன் பயன்பாட்டினால் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தடுப்பதற்காக, 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்கள் தடை செய்யப்படும். மொபைல் போன் பயன்பாடு அதிகரிப்பால் குழந்தைகளுக்கு ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தைத் தடுப்பதே இந்தத் தடையின் நோக்கமாகும்,” என்று சித்தராமையா கூறியுள்ளார்.

முன்னதாக சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிப்பது தொடர்பாக மாநிலப் பொதுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.

ADVERTISEMENT

இதில் ஆஸ்திரேலியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகள் கவனத்தில் கொள்ளப்பட்டது.

அதைதொடர்ந்து இன்று சட்டமன்றத்தில் சித்தராமையா அறிவித்துள்ளார். 

ADVERTISEMENT

கர்நாடக அரசின் இந்த அறிவிப்புக்கு பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share