ADVERTISEMENT

“10 நாள்ல 10 ஊரைப் பார்க்கணுமா?” – ஓடி ஓடிச் சுற்றும் பயணங்களுக்கு ‘குட்-பை’… இது ‘Slowcation’ காலம்!

Published On:

| By Santhosh Raj Saravanan

slowcation analog travel trend digital detox sustainable tourism tamil article

வழக்கமாக நாம் சுற்றுலா சென்றால் என்ன செய்வோம்? “காலையில ஊட்டி, மத்தியானம் குன்னூர், ராத்திரி கோத்தகிரி,” என்று ஒரு எக்ஸெல் ஷீட் போட்டு, பந்தயக் குதிரை போல ஓடிக்கொண்டே இருப்போம். ஊருக்குத் திரும்பி வந்த பிறகு, “அப்பாடா! டூர் போனதை விட ஆபீஸ் வேலையே மேல்,” என்று அலுத்துக்கொள்வோம்.

ஆனால், 2026-ம் ஆண்டின் பயண விரும்பிகள் (Travelers) இந்த அவசரத்தை வெறுக்கத் தொடங்கியுள்ளனர். பயணங்களில் நிம்மதியைத் தேடி ஸ்லோகேஷன்” (Slowcation) என்ற புதிய பாதையை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

அது என்ன ‘ஸ்லோகேஷன்’? பெயரிலேயே அர்த்தம் இருக்கிறது. ‘Slow’ (மெதுவாக) மற்றும் ‘Vacation’ (விடுமுறை) என்பதன் கலவைதான் இது.

  • 10 ஊர்களுக்குச் செல்வதற்குப் பதிலாக, ஒரே ஒரு கிராமத்தையோ அல்லது நகரத்தையோ தேர்ந்தெடுத்து, அங்கு ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் முழுமையாகத் தங்குவது.
  • அந்த இடத்தின் கலாச்சாரத்தை மேலோட்டமாகப் பார்க்காமல், உள்ளூர் மக்களுடன் பழகி, அவர்களின் உணவைச் சமைத்து, நிதானமாக ரசிப்பதுதான் இதன் நோக்கம்.
  • இதனால் விமானம் மற்றும் கார் பயணங்கள் குறைவதால், கார்பன் ஃபுட்பிரிண்ட்’ (Carbon Footprint) எனப்படும் சுற்றுச்சூழல் மாசும் குறைகிறது.

அனலாக்’ வாழ்க்கை (Analog Travel): இந்த ஸ்லோகேஷனின் மிக முக்கியமான விதிமுறை – நோ வைஃபை, நோ கூகுள்!” இன்றைய டிஜிட்டல் உலகில் நாம் எப்போதும் ஆன்லைனிலேயே இருக்கிறோம் (Hyperconnectivity). அதற்கு ஒரு மருந்தாக, அனலாக் டிராவல்’ பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
  • தொடு உணர்வு (Tactile Experiences): கையில் மொபைலை வைத்துக்கொண்டு ரீல்ஸ் பார்ப்பதற்குப் பதிலாக, களிமண் பானை செய்வது (Pottery), வயலில் இறங்கி வேலை செய்வது, காகிதப் புத்தகங்களைப் படிப்பது அல்லது டைரியில் எழுதுவது போன்ற விஷயங்களில் ஈடுபடுகிறார்கள்.

ஏன் இந்த மாற்றம்? “நாங்கள் போட்டோ எடுக்க வரவில்லை; ஃபீல் (Feel) பண்ண வந்திருக்கிறோம்,” என்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். ஒரு இடத்திற்குச் சென்று, அவசர அவசரமாகச் செல்ஃபி எடுத்து இன்ஸ்டாவில் போடுவதால் கிடைக்கும் லைக்குகளை விட, ஒரு மரத்தடியில் சும்மா அமர்ந்திருப்பதில் கிடைக்கும் அமைதி அதிகம் என்பதை உலகம் உணரத் தொடங்கியுள்ளது.

முடிவு: அடுத்த முறை நீங்கள் லீவு போடும்போது, “எங்கெல்லாம் போகலாம்?” என்று பட்டியல் போடாதீர்கள். “எங்கே போய் சும்மா இருக்கலாம்?” என்று யோசியுங்கள்.

ADVERTISEMENT

வேகம் விவேகம் மட்டுமல்ல… சில சமயங்களில் விபத்தும் கூட (மன அமைதிக்கு)! நிதானமே பிரதானம்!

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share