சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து- 2 பெண்கள் உட்பட 5 பேர் பலி

Published On:

| By Minnambalam Desk

Sivakasi Firecracker Accident

சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். Sivakasi Firecracker Accident

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சின்னகாமன்பட்டியில் கோகுலேஸ் ஃப்யர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் இன்று ஜூலை 1 காலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் பயங்கர சப்தங்களுடன் வெடித்து சிதறின.

இந்த விபத்தின் போது பட்டாசு ஆலையில் பணியில் இருந்த 2 பெண்கள் உட்பட 5 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share