நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் பராசக்தி திரைப்படம் வரும் டிசம்பர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி.
2026 ஜனவரி 14 அன்று படத்தை வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதியே படம் வெளியாக உள்ளது.
உலகெங்கிலும் உள்ள திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கோரிக்கையின்படியும் தீவிர ஆலோசனையின் படியும் வரும் ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் பராசக்தி படத்தை வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
இதற்கிடையே நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜயின் கடைசி படமான ஜனநாயகன் ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த சூழலில் பொங்கல் வெளியீடாக பராசக்தியும் வெளியாக உள்ளதால் இரு நடிகர்களின் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
