வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (அக்டோப்ர் 2) தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஆல்ரவுண்டரான ஜஸ்டின் க்ரீவ்ஸ் மட்டுமே அதிகபட்சமாக 32 ரன்கள் அடித்தார்.
இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது இந்தியாவில் அவரது சிறந்த பந்துவீச்சாக பதிவானது.
அவரைத் தவிர்த்து பும்ரா 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஜோடி 68 ரன்கள் குவித்த நிலையில், 36 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் ஜெய்ஸ்வால். அதன்பின்னர் களமிறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
எனினும் மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுல் (53*) மற்றும் கேப்டன் சுப்மன் கில் (18*) ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் குவித்துள்ளது.
இந்த போட்டியில் கே.எல்.ராகுல் அரைசதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக அரைசதம் விளாசிய இந்திய தொடக்க வீரர் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறினார். அந்த வகையில் கவாஸ்கர் 42, சேவாக் 29, கம்பீர் 22 முதல் மூன்று இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாயி சுதர்சன் 7 ரன்களுக்கு பின்னாடி பின் கால் வைத்து ஆட்டமிழந்து ரோஸ்டன் சேஸின் ஸ்கிடரை தவறவிட்டதால் இந்தியாவும் அவுட் ஆனது. ஆனால், ஷுப்மான் கில் நாள் முழுவதும் விளையாட உள்ளே நுழைந்தார், ராகுல் தனது 19வது டெஸ்ட் போட்டியின் அரை சதத்தை நோக்கி அமைதியாக உழைத்தார்.
சுருக்கமான ஸ்கோர்: இந்தியா 121/2 (கே.எல். ராகுல் 53*, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36; ஜெய்டன் சீல்ஸ் 1-21) வெஸ்ட் இண்டீஸ் 162 (ஜஸ்டின் கிரீவ்ஸ் 32; முகமது சிராஜ் 4-40, ஜஸ்பிரித் பும்ரா 3-42, குல்தீப் யாதவ் 24125 ரன்கள்) பின்தங்கினார்.