தமிழ்நாட்டில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்காக 94.74% படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நவம்பர் 4-ந் தேதி தொடங்கி டிசம்பர் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.
அக்டோபர் 27-ன் படி, இம்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50,97,44,423 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 50,25,13,094 கணக்கெடுப்பு படிவங்கள் (98.54%) இதுவரை (நவம்பர் 18) விநியோகிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக 5,33,093 வாக்குச் சாவடி அலுவலர்கள், 10,41,291 முகவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில்…
தமிழ்நாட்டில் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 6,07,41,484 கணக்கெடுப்பு படிவங்கள் (94.74%) இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 83,45,574 கணக்கெடுப்பு படிவங்கள் மின்னணு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 68,467 வாக்குச் சாவடி அலுவலர்களும் 2,37,390 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் 10,21,578 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 9,65,178 படிவங்கள் (94.48%) விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2,26,500 கணக்கெடுப்பு படிவங்கள் மின்னணு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
