ஐ ப்ரோவை அழகாக்க… புருவங்கள் மிளிர.. வீட்டில் இருக்கும் பொருட்களே போதும்..!

Published On:

| By Santhosh Raj Saravanan

simple steps to beautify and grow eyebrows

ஐ ப்ரோ எனப்படும் முகப் புருவங்களை அழகாக்க, வளர்க்க நாம் எளிய வழிகளை பின்பற்றலாம்.

நம் அனைவருக்கும் நமது முகம் அழகாக தெரிய வேண்டும் என்ற ஆசை இருக்கும். முக அழகைக் கூட்ட பேஷியல், ஐ ப்ரோ ட்ரிம் உள்ளிட்டவற்றை செய்வார்கள். பலருக்கும் ஐ ப்ரோ எனப்படும் புருவ முடி ஒழுங்கற்றதாகவும், மெல்லியதாகவும் இருக்கும். ஆனால், புருவ முடி கற்றையாக அழகாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பலருக்கும் தெரியாது.

ADVERTISEMENT

அடர்த்தியான புருவங்களைப் பெற இயற்கையான வீட்டு வைத்திய முறையை நாம் முயற்சி செய்யலாம். இது  புருவங்களின் அடர்த்தி, பளபளப்பு, ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்தும். புருவங்களை வளர்க்க உதவும் 5 முறைகளைப் பார்க்கலாம்.

ஆமணக்கு எண்ணெய் (Castor oil): ஆமணக்கு எண்ணெய்யில் ரிசினோலிக் அமிலம், வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை புருவ முடியின் நுண்குழாய்களை வளர்ர்த்து ஆரோக்கியாக புருவங்கள் வளர வைக்கிறது. ஆமணக்கு எண்ணெய்யில் சுத்தமான பஞ்சை நனைத்து, ஒவ்வொரு நாளும் படுக்கைக்கு முன் புருவங்கள் மீது மெல்லியதாக தடவ வேண்டும். 3 நிமிடங்கள் அதனை மசாஜ் செய்து இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட வேண்டும். காலையில் எழுந்ததும் அதனை கழுவிவிட வேண்டும்.

ADVERTISEMENT

தேங்காய் எண்ணெய் (Coconut oil): தேங்காய் எண்ணெய்யில் லாரிக் அமிலம்  உள்ளது. இது  முடியில் புரத இழப்பை குறைக்கிறது. புருவ இழைகள் வலுவாகவும், உடையும் வாய்ப்பையும் தடுக்கிறது. தேங்காய் எண்ணெய்யை  3 நிமிடங்கள் தடவி இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையில் கழுவ வேண்டும். புருவ முடி மாற்றத்திற்கு வாரத்தில் குறைந்தது 5 நாட்கள் இதனை பயன்படுத்தலாம்.

கற்றாழை (aloe vera): கற்றாழை ஜெல்லில் நொதிகள் நிறைந்துள்ளன. அத்துடன், ஈரப்பதமூட்டும் மற்றும் நீரேற்றப் பண்புகளும் உள்ளன. அவை முடியில் ஆரோக்கியமான நுண்ணறை செயல்பாட்டை ஆதரிக்கிறது. கற்றாழை இலையில் இருந்து புதிய ஜெல்லை பிரித்தெடுத்து புருவங்களில் நேரடியாக பூச வேண்டும். 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின்னர் கழுவ வேண்டும். வாரத்திற்கு 4 முறை பயன்படுத்தினால் புருவப் பகுதியை சுற்றியுள்ள சருமத்தின் எரிச்சலையும் குணப்படுத்தும்.

ADVERTISEMENT

வெங்காயச் சாறு (Onion):  வெங்காயச் சாற்றில் சல்பர் நிறைந்துள்ளது. இது கெலாஜன் உற்பத்தியை ஆதரித்து முடியின் வலிமையை மேம்படுத்துகிறது. ஒரு சிறிய துண்டு வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை சுத்தமான பருத்தி துணியைப் பயன்படுத்தி கவனமாக புருவத்தில் பூசி 20 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கண்ணீர் படுவதை தவிர்க்கும் வகையில் கவனமுடன் செயல்பட வேண்டும்.

நல்லெண்ணெய் (Olive oil): நல்லெண்ணயில் வைட்டமின் ஈ மற்றும் ஆக்சிஜனேற்றப் பண்புகள் உள்ளன. இது முடியின் நுண்குழாய்களை வளர்த்து முடியின் அமைப்பை மேம்படுத்துகிறது. ஒரு சிறிய துணி நல்லெண்ணய்யை எடுத்து தூங்கச் செல்வதற்கு முன்பு புருவங்களில் இட்டு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இரவு முழுவதும் விட்டுவிட்டு காலையில் அதனை கழுவ வேண்டும். அப்படி செய்தால் புருவ வளர்ச்சிக்கு சிறப்பானதாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share