ADVERTISEMENT

“ஒரே நாளில் 11% காலி!” – வெள்ளியை விழுங்கிய ‘கெவின் வார்ஷ்’ (Kevin Warsh) புயல்… முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

Published On:

| By Santhosh Raj Saravanan

silver price crash 11 percent drop kevin warsh

தங்கம் விலை ஏறினால் கவலைப்படும் நாம், வெள்ளி விலை குறைந்தால் சந்தோஷப்படுவோம். ஆனால், நேற்று சர்வதேசச் சந்தையில் வெள்ளிக்கு நேர்ந்தது சாதாரண சரிவு அல்ல; அது ஒரு “ரத்தக் களரி” (Bloody Sell-off).

ஒரே நாளில் வெள்ளியின் விலை சுமார் 11% அதிரடியாகச் சரிந்து, முதலீட்டாளர்களைத் தலையில் கைவைக்கச் செய்துள்ளது. “வெள்ளி எப்போதுமே கொஞ்சம் ஆட்டம் காட்டும், ஆனால் இவ்வளவு மோசமாக விழுந்தது இதுவே முதல்முறை,” என்று சந்தை வல்லுநர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.

ADVERTISEMENT

திடீர் வீழ்ச்சிக்கு என்ன காரணம்? இந்தச் சரிவுக்குப் பின்னால் இருக்கும் முக்கியக் காரணம், அமெரிக்காவின் ஒரு அரசியல் முடிவு. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசர்வ்’ (Federal Reserve) அமைப்பின் அடுத்த தலைவராக கெவின் வார்ஷ் (Kevin Warsh) என்பவரை நியமித்துள்ளார்.

  • யார் இந்த கெவின்? இவர் பொருளாதாரக் கொள்கைகளில் ஒரு பருந்து’ (Hawk) என்று அழைக்கப்படுபவர். அதாவது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை (Interest Rates) அதிரடியாக உயர்த்தத் தயங்காதவர்.
  • சந்தையின் பயம்: கெவின் வார்ஷ் பதவிக்கு வந்தால், வட்டி விகிதங்கள் உயரும்; அமெரிக்க டாலரின் மதிப்பு (Dollar Index) எகிறும். டாலர் வலிமையானால், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களின் விலை குறையும் என்பது பொருளாதார விதி.

ஏன் வெள்ளி மட்டும் இவ்வளவு அடி வாங்குகிறது? தங்கமும் சரிந்திருக்கிறது. ஆனால், வெள்ளி ஏன் 11% விழுந்தது?

ADVERTISEMENT
  • வெள்ளி என்பது முதலீட்டுப் பொருள் மட்டுமல்ல; அது ஒரு தொழில்முறை உலோகம் (Industrial Metal).
  • கெவின் வார்ஷின் கடுமையான கொள்கைகளால் பொருளாதார வளர்ச்சி வேகம் குறையலாம் (Recession Fear) என்ற அச்சம் எழுந்துள்ளது. பொருளாதாரம் மந்தமானால், தொழிற்சாலைகளில் வெள்ளிக்கான தேவை குறையும். இந்த இரட்டைத் தாக்குதலால் (Double Whammy) வெள்ளி விலை தரைமட்டத்திற்குச் சென்றுள்ளது.

இந்தியாவில் எதிரொலி என்ன? சர்வதேசச் சந்தையின் இந்தத் தாக்கம், இந்தியாவின் எம்சிஎக்ஸ் (MCX) சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

  • கிலோவுக்குப் பல ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளதால், சிறு முதலீட்டாளர்கள் மற்றும் டிரேடர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர்.
  • மக்களுக்கு லாபமா? ஆபரண வெள்ளி மற்றும் பாத்திரங்கள் வாங்கக் காத்திருந்த சாமானிய மக்களுக்கு இது ஒரு பொன்னான (அல்லது வெள்ளியான) வாய்ப்பு. வரும் பட்ஜெட் தாக்கல் மற்றும் இந்தச் சரிவு இரண்டும் சேர்ந்து விலையை மேலும் குறைக்கலாம்.

அடுத்து என்ன நடக்கும்? “இது ஒரு தற்காலிகப் பதற்றம் (Panic Selling) தான். கெவின் வார்ஷ் பதவி ஏற்றுப் பேசிய பிறகுதான் உண்மையான நிலைமை தெரியும்,” என்கிறார்கள் நிபுணர்கள். ஆனால், அதுவரை வெள்ளி சந்தை ‘கரடி’யின் (Bear Market) பிடியில்தான் இருக்கும் போலிருக்கிறது.

ADVERTISEMENT

கையில் காசு இருந்தா… கொலுசு வாங்க இதுதான் சரியான டைம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share