சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று (செப்டம்பர் 24) ஒரே நாளில் 21 பென்கள் உட்பட 71 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர்.
சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான பாதுகாப்பு படை நடவடிக்கைகள் அதி தீவிரமடைந்துள்ளன. மாவோயிஸ்டுகளின் மூத்த தளபதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகளில் ஒரு பகுதியினர் ஆயுதங்களை மவுனிக்க செய்வதாக அறிவித்து சரணடைந்து வருகின்றனர்.
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவடா வனப் பகுதியில் 21 பெண்கள் உட்பட 71 மாவோயிஸ்டுகள் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 30 பேரின் தலைக்கு ரூ.64 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் ஏற்கனவே பாதுகாப்பு படை அறிவித்திருந்தது.
தற்போது சரணடைந்த 71 மாவோயிஸ்டுகளுக்கு அரசின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், ரூ.50,000 ஊக்கத்தொகை மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.