சென்னையில் தங்கம் விலை இன்று (செப்டம்பர் 6) சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.80,040 ஆக புதிய உச்சம் தொட்டுள்ளது.
ஆபரணத்தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதன்படி சென்னையில் இன்று காலையில் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூபாய் 140 உயர்ந்து ரூ.10,005க்கும், ஒரு சவரன் ரூபாய் 1,120 உயர்ந்து, ரூ.80,040 விற்பனையாகி வருகிறது.
அதே போன்று 24 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூபாய் 153 உயர்ந்து ரூ.10,914க்கும், ஒரு சவரன் ரூபாய் 1,224 உயர்ந்து, ரூ.87,312 விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையானது இன்று ஒரு கிராமுக்கு ரூ.2 உயர்ந்து 138க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 2000 உயர்ந்து ரூ.1,38,000க்கும் விற்பனையாகி வருகிறது.
முதன்முறையாக ஒரு சவரன் தங்கம் ரூ.80 ஆயிரத்தை கடந்துள்ளது, நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.