கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு அரசு சார்பில் செந்தில் பாலாஜி நிதியுதவி வழங்கினார்.
கரூர் கடந்த 27ந் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் நடிகர் விஜய் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரழிந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே நிதி வழங்கப்பட்டு விட்டது.இந்த நிலையில் இன்று காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை முதல் கட்டமாக 45 நபர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்து காசோலைகளை வழங்கினர்.