சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி உடல் நலக்குறைவால் காலமானார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதி திமுக எம்எல்ஏ பொன்னுசாமி. இவருக்கு வயது 74.
இவர் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு பொன்னுசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பொன்னுசாமிக்கு ஏற்கனவே இரு முறை மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்சியோ செய்யப்பட்ட நிலையில், அவர் மூன்றாவது முறையாக ஏற்பட்ட மாரடைப்பில் உயிரிழந்தார்.
இவர் கடந்த 2001, 2006 ஆம் ஆண்டுகளில் சேந்தமங்கலம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் 2016ம் ஆண்டு திமுக சார்பில் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த 2021ம் ஆண்டு நடத்த தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதிமுகவில் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய பொன்னுசாமி பின்னர் திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
