ADVERTISEMENT

சத்தீஸ்கரில் மூத்த மாவோயிஸ்ட் தளபதிகள் 2 பேர் சுட்டுக் கொலை- அமித்ஷா பாராட்டு

Published On:

| By Mathi

Maoists Amit Shah

சத்தீஸ்கர் மாநிலத்தில் மூத்த மாவோயிஸ்ட் இயக்க தளபதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா தமது எக்ஸ் பக்கத்தில், “நக்சலைட்டுகளுக்கு எதிராக (மாவோயிஸ்டுகளுக்கு) மற்றொரு குறிப்பிடத்தக்க வெற்றியை நமது பாதுகாப்புப் படைகள் பதிவு செய்துள்ளன.

ADVERTISEMENT

மகாராஷ்டிரா-சத்தீஸ்கர் எல்லையில் உள்ள நாராயண்பூரில் உள்ள அபுஜ்மத் பகுதியில், நமது படை வீரர்கள் இரண்டு நக்சல் மத்திய குழு உறுப்பினர் தலைவர்களான கடாரி சத்தியநாராயண ரெட்டி என்ற கோசா மற்றும் கட்டா ராமச்சந்திரா ரெட்டி ஆகியோரை சுட்டுக் கொன்றனர். இவர்களைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு தலா 40 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

நமது பாதுகாப்புப் படைகள்,
நக்சல் இயக்கங்களின் முக்கிய தலைவர்களை முறையாகக் களைந்து, பயங்கரவாதத்தின் முதுகெலும்பை நசுக்கியிருக்கிறார்கள்” என பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share