எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் சீனியர் தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி தொடங்கிய ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தேர்தல் பிரச்சாரத்தில் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் செங்கோட்டையன் செப்டம்பர் 5ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து மனம் திறக்க உள்ளதா கூறியது அதிமுக வட்டாரத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் கடந்த 2 தினங்களாகத் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டு வந்தார்.
இன்று ஈரோடு சுண்ணாம்பு ஓடையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ள அதிமுகவின் ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கருப்பண்ணசாமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் , செப்டம்பர் 5ஆம் தேதி எதைப்பற்றி நான் பேசுவேன் என்பது அன்று தான் தெரியும் என்றார்.
தொடர்ச்சியாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் “நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை, நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை”என்று பாடல் வரிகளை பாடி பதிலளித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.