முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் மூத்த தலைவருமான செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து, அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தனது கருத்தை தெரிவித்தார்.
இந்தநிலையில் நேற்று ஓபிஎஸ் மாவட்டமான தேனியில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனின் கருத்துக்கு பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

இந்தநிலையில் இன்று (செப்டம்பர் 6) செங்கோட்டையன் கெடு விதித்தது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலசோனை நடத்தினார். அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமண உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.
இந்தசூழலில் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் செங்கோட்டையன் இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.