எதிர்க்கட்சி வரிசையில் கூட இனி எடப்பாடிக்கு வாய்ப்பில்லை – செல்வப்பெருந்தகை

Published On:

| By Pandeeswari Gurusamy

eps

முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி வரிசையில் அமர இனி மேல் வாய்ப்பில்லை என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று (மார்ச் 6) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது:“ஒவ்வொரு கட்சியாக அழைத்து முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொகுதி பங்கீடு பேச்சு வார்தை குழுவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

பின்னர் எந்தெந்தத் தொகுதிகள் என்பது குறித்து நாங்கள் அவர்களிடம் பேசுவோம். குறிப்பாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதலமைச்சர் எங்கெல்லாம் கடுமையான போட்டி இருக்குமோ அதையெல்லாம் திமுக எடுத்து எதிரணியில் உள்ளவர்களைத் தோல்வியடையச் செய்து வெற்றி கண்டிருக்கிறார்.

இது என் அரசியல் களத்தில் முதல் அனுபவம்.முன்பெல்லாம் எங்கு பிரச்சினை இருக்கிறதோ அதை வந்து கூட்டணி கட்சிக்குக் கொடுப்பார்கள். ஆனால் ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு மேலாகப் பொது வாழ்க்கையில் இருக்கிறேன். தமிழ்நாட்டு அரசியலில் நான் பார்த்ததில் முதல் முறையாக நான் கண்டது – நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கடுமையான போட்டி இருக்கும் என்று தெரிந்தவுடன் அவரே அழைத்து, ‘இந்த இடத்தில் உங்களால் வெற்றி காண முடியாது, அதை நான் எதிர்கொள்கிறேன்’ என்றார். என்னால் தொகுதியைக் கூடச் சொல்ல முடியும்.ஆகவே சுமுகமாக எல்லாம் நல்ல முறையில் முடியும்.

ADVERTISEMENT

முன்னாள் முதலமைச்சர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி வரிசையில் அமர இனி மேல் வாய்ப்பில்லை.” என்று தெரிவித்தார்.

”காங்கிரஸ் சார்பில் 5,000-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, “இப்போது சிங் டியோ தலைமையில் ஒரு ஸ்க்ரீனிங் கமிட்டி அமைத்திருக்கிறார்கள். அவர்கள் நான்கு அல்லது ஐந்து நாட்களில் தமிழகம் வந்து ஆய்வு செய்வார்கள்” என்றார்.

ADVERTISEMENT

ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு வருவது குறித்த கேள்விக்கு, “அவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருக்கிறார். ஐந்து மாநிலத் தேர்தல்கள் – அசாம், மேற்கு வங்கம், பாண்டிச்சேரி, தமிழ்நாடு, கேரளா எல்லா இடங்களுக்கும் செல்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு கண்டிப்பாக உறுதியாக வருவார்” என்றார்.

தவெக தலைவர் விஜய் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்த கேள்விக்கு, “அது ஒரு தனிப்பட்ட விஷயம். அதை நாம் பேசினால் நாகரிகமாக இருக்குமா? அதைப் பேசுவது நாகரிகமாக இருக்காது” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share