செங்கோட்டையன் விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க உள்ளார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.இந்நிலையில், கரூர் பெருந்துயர்ச் சம்பவம் நடந்த பிறகும் கூட அதிமுக-வை பெரிய அளவில் விமர்சிக்காத நிலையில், விஜய் தவெகவிற்கும் திமுக-விற்கும் இடையில்தான் போட்டி என்று தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்நிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ள நிலையில், தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக, தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை “செல்லாத நோட்டு” என்று எடப்பாடி விமர்சித்தார்.
இந்நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, செங்கோட்டையன் குறித்து பேசுகையில்,“நான் ஏற்கனவே ‘செல்லாத நோட்டு’ என்று சொல்லிவிட்டேன். எங்கள் பொதுச் செயலாளரும் சொல்லிவிட்டார். செல்லாத நோட்டு ஆயிரம் பேசி என்ன செய்ய? அது ஒன்றும் ஆகப்போவதில்லை. விடுங்கள்” என்றார்.
விஜயை முதல்வராக்காமல் ஓயமாட்டேன் என்று செங்கோட்டையன் சூளுரை என்பது குறித்த கேள்விக்கு,“எந்த நாட்டுக்கு முதலமைச்சராக்கப் போகிறார்? கல்லூரிக்கு வேண்டுமானால் முதல்வராக்கலாம். இந்தச் செங்கோட்டையனுக்கு வயது என்னங்க? இனிமேல் இவர் எந்த நாட்டில் போய் என்னத்தைப் போராடி, என்னத்தை விஜயைக் கொண்டு வந்து…
இவரெல்லாம் தூய்மையின் பிறப்பிடமா? இவர் என்ன தூய்மையானவரா? எங்களிடமிருந்தவர். நாங்கள் பல்லைக் குத்தி முகர்ந்து பார்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அவரைப் பற்றி நாங்கள் என்ன பேசுவது? ஆனால் அவருக்குத் தெரியவில்லை. ‘நீ கிழவன், நீ பேசாம இரு’ என்று தள்ளிவிட்டுப் போயிடுறாங்க. அப்புறம் எதுக்கு? இது மாதிரி பேசுவதால் செங்கோட்டையனை ஏற்றுக்கொள்ளப் போகிறார்களா?” என்று செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.
