பாரதியார் குறித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சு அபாரம்; சீமான் திமுகவுக்கு பெரும் சவால் என்று ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பாரதியார் குறித்து ஆர்.எஸ்.எஸ்.-ன் சார்பு அமைப்புகளில் ஒன்றான விஜில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் சீமான் பங்கேற்றார். அப்போது, பார்ப்பனர் என்ற கடப்பாரையை கொண்டு திராவிடத்தை இடித்து தள்ளுவேன் என்று சீமான் பேசியிருந்தார்.
பாரதியார் குறித்த சீமானின் பேச்சை ஷேர் செய்துள்ள ‘துக்ளக்’ குருமூர்த்தி, “பாரதியாரை பற்றி சீமான். கேட்கவேண்டிய அபாரமான உரை. பாரதியாரை ஏற்ற தமிழ் தேசியம் பாரதி பாடிய சேதமில்லாத ஹிந்துஸ்தானத்தின் அங்கம். தமிழைத் திருடிய திமுகவுக்கு பெரும் சவால் சீமான்” என பாராட்டியுள்ளார்.
